சிதம்பரம் தெற்கு சன்னதி, மேல வீதி, அனந்தீஸ்வரர் கோவில் தெரு, வேங்கன் தெரு உள்பட பல்வேறு பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இவை சாலையில் நடந்து செல்பவர்களை கடிக்க பாய்வதுடன், வீடுகள் மற்றும் கடைகளில் புகுந்து அங்குள்ள பொருட்களை சூறையாடி வருகிறது. எனவே நகரில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.