ராமநாதபுரம் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற நோயாளிகளுக்கு சீட்டு வழங்கும் பகுதி, எக்ஸ்ரே எடுக்கும் இடம், நோயாளிகளுக்கான வார்டுகள், அறுவை சிகிச்சை அரங்குகள் ஆகியவை பழைய கட்டிடத்தில் இயங்குகிறது. இந்த கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து காணப்படுகிறது. ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன்பாக பழைய கட்டிட பகுதிகளை சீரமைக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.