தாமதமாகும் பாலம் கட்டும் பணி

Update: 2024-06-09 12:30 GMT

பெரம்பலூர் மாவட்டம், எழுமூர்- கீழப்புலியூர் செல்லும் சாலையின் குறுக்கே செல்லும் காற்றாட்டு வாய்க்காலில் கடந்த ஓராண்டுக்கு முன்பு பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணி தற்போது வரை முடிவடையாமல் காலதாமதமாக நடைபெற்று வருவதால், வாகன ஓட்டிகள் மற்றும் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்