வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-06-09 12:26 GMT

பெரம்பலூர் மாவட்டம், வயலப்பாடி- வேப்பூர் சாலையில் சுண்ணாம்புக்கல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் இருந்து சுண்ணாம்பு ஏற்றுச்செல்லும் லாரிகளில் அதிக அளவில் லோடுகள் ஏற்றிச்செல்வதால் சாலைகளில் சுண்ணாம்பு கற்கள் அதிக அளவில் கொட்டுகின்றன. இதனால் வெயில் காலத்தில் புழுதி பறப்பதுடன், மழைக்காலத்தில் சாலையில் சுண்ணாம்புகள் சேறுபோல் காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மழை காலத்தில் இரவு நேரத்தில் சிலர் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்