ஆபத்தான மின்கம்பம்

Update: 2024-06-09 11:02 GMT
தூத்துக்குடி குலையன்கரிசல் கிழக்கு தெ௫ முத்தாரம்மன் கோவில் அருகில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததால், பலத்த காற்றில் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்