புதுப்பேட்டை அருகே கோட்டலாம்பாக்கம் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கீழே விழுந்து வருவதால் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப அச்சப்படுகின்றனர். எனவே அசம்பாவிதங்கள் நிகழ்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய அங்கன்வாடி மையம் அமைத்து தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.