திருவெண்ணெய்நல்லூர் தாலுகா தடுத்தாட்கொண்டூர் கிராமத்தின் மைய பகுதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் குளம் அமைந்துள்ளது. இக்குளத்தில் உள்ள மீன்கள் செத்து கிடக்கின்றன. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குளத்தில் செத்து கிடக்கும் மீன்களை அகற்றி அங்கு சுகாதார பணிகளை மேற்கொள்வதோடு, குளத்தையும் தூர்வார சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.