நத்தம்-மதுரை 4 வழிச்சாலையில் இருந்து பாலப்பநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.