சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா கீழராங்கியம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். அங்கன்வாடி இருக்கும் நிலையை பார்த்து பெற்றோர் தங்களது குழந்தைகளை இங்கு அனுப்ப அச்சப்படுகின்றனர். ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?