விருதுநகர் மாவட்டம் பனைக்குடி ஆண்டுகொண்டான் கிராமத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் மழை, வெயில் காலங்களில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் அது எப்போது விழும் என்ற அச்சத்திலேயே உள்ளனர். எனவே இவற்றை இடித்துவிட்டு புதிய நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.