விருதுநகர் மாவட்டம் அய்யனார் நகரில் உள்ள கழிவுநீர் ஓடைப்பாலம் முற்றிலும் பழுதடைந்து உள்ளது. எப்போது விழும் என்ற ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர்.