பெரம்பலூரில் புதிதாக அமைய உள்ள மருத்துவ கல்லூரியை பெரம்பலூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே பெரம்பலூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்கப்பட்டால் எதிர்பாராவிதமாக விபத்து ஏற்படும்போது உயிரிழப்பை உடனடியாக தடுக்க முடியும். மேலும் காலம் தாழ்த்தாமல் புதிய மருத்துவக்கல்லூரியை அமைப்பதற்கு அத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.