விபத்து அபாயம்

Update: 2024-06-02 07:25 GMT

சாமியார்மடத்தில் காட்டாத்துறை அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி கட்டிடத்தையொட்டி பட்டணங்கால்வாய் செல்கிறது. பள்ளிக்கூடத்தின் பின்பக்க சுற்றுச்சுவர் ஒரு ஆண்டுக்கு முன்பு பெய்த கனமழையில் இடிந்து கால்வாய்க்குள் விழுந்தது. அதன்பிறகு இதுவரை சேதமடைந்த சுற்றுச்சுவர் சீரமைக்கப்படவில்லை. தற்போது பெய்து வரும் மழையால் சுவர் இடிந்த இடத்தில் மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த சுற்றுச்சுவரை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்