எடப்பாடி நகரின் தெற்கு எல்லை பகுதியில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் மறுகரையில் நண்டுக்காரன் காடு, சரிபாறைக்க்காடு, செட்டிகாடு, மொரம்புக்காடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மறுகரையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஏரிக்கரை வழியாக சென்று, எடப்பாடி நகர் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் ஆண்டுதோறும் பருவமழை மற்றும் கனமழை காலங்களில் பெரிய ஏரி நிரம்பி வழியும் சூழலில், மிகவும் ஆபத்தான முறையில் மாணவர்கள் ஏரி கரையை கடந்து பள்ளிக்கு சென்று வரும் அவல நிலை தொடர்ந்து வருகிறது. எதிர்வரும் பருவமழை தொடங்குவதற்கு முன் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் பாலம் அமைத்து தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
-சுந்தர், எடப்பாடி.