மழைக்காலத்தில், வேடசந்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி தண்ணீர் சூழ்ந்து விடுகிறது. பின்னர் தண்ணீர் வழிந்தோடினாலும் அந்த இடமே சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் சுகாதார நிலையத்துக்கு வரும் நோயாளிகள் அவதியடைகின்றனர். மேலும் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.