விழுப்புரம் அருகே பொன்னங்குப்பம் பகுதியில் இயங்கி வரும் கால்நடை மருத்துவமனையில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் இடம் முற்றிலும் சேதமடைந்து பள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க கால்நடை மருத்துவமனையை சீரமைக்க வேண்டியது அவசியம்.