பெரம்பலூர்-துறையூர் சாலையில் பழைய நகராட்சி அலுவலகம் அருகே தெப்பக்குளம் ஒன்று உள்ளது. இந்த தெப்பக்குளத்தில் சுற்றி உள்ள நடைபாதையில் காலை, மாலை நேரத்தில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் பகல், இரவு நேரத்தில் மது பிரியர்கள் தெப்பக்குள நடைபாதையில் வைத்து மது அருந்துகின்றனர். மேலும் அவா்கள் மது பாட்டில்களை நடைபாதையில் உடைத்து விட்டு செல்வதால் நடைபயிற்சி செல்லும் பொதுமக்களை கால்களை பதம் பார்க்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெப்பக்குளத்தில் மது அருந்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.