பாசிகள் அகற்றப்படுமா?

Update: 2024-05-26 08:45 GMT

108 வைணவ திருப்பதிகளில் ஒன்றாக திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலின் முன்புறம் மற்றும் பின்புற உள்ள படிக்கட்டுகள் பாசி பிடித்து வழுக்கும் நிலையில் உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் படிகளில் ஏறும்போது பெரும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். சில நேரங்களில் வழுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் நலன்கருதி படிகளில் படிந்துள்ள பாசிகளை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-ரமேஷ்குமார், திருவட்டார்.

மேலும் செய்திகள்