திருவள்ளூர் மாவட்டம், புட்லூர் கிராமத்தில் பொதுமக்களுக்காக சமுதாய கழிப்பறை ஒன்று கட்டப்பட்டு உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே கட்டி முடிக்கப்பட்ட இந்த கழிப்பறை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றன. பராமரிப்பு இல்லாமல் இருக்கும் கழிப்பறையை, சீரமைத்து பொதுமக்களின் பயன்பட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.