பூட்டியே கிடக்கும் ஊராட்சி சேவை மையம்

Update: 2024-05-19 12:00 GMT
கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சி குறுக்கு சாலை பங்களா நகரில் ரூ.17 லட்சத்தில் கிராம ஊராட்சி சேவை மையம் கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழாவுடன் அப்படியே விடப்பட்டு, தற்போது பூட்டியே கிடக்கிறது. இதனால் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், மாணவ-மாணவிகள் தங்களது சான்றிதழ்களை பெறுவதற்காக வேலாயுதம்பாளையம், பரமத்தி வேலூருக்கு செல்ல வேண்டியது உள்ளது. இதனால் வீண் அலைச்சல் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மையத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்