கடலூர் செம்மண்டலம் சந்திப்பில் கம்மியம்பேட்டைசாலை, புதுச்சேரி சாலை, கடலூர்-நெல்லிக்குப்பம் சாலை சந்திக்கும் முக்கிய பகுதியாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் காணப்படுகிறது. சாலையின் ஒருபுறத்தில் இருந்து மறுபுறம் செல்லும்போது அடிக்கடி விபத்துகள் நடந்து உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே இதை தவிர்க்க அங்கு பல்லடுக்கு மேம்பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.