கழிப்பறை வசதி அமைத்து தரப்படுமா?

Update: 2024-05-12 18:18 GMT
கடலூர் அருகே கொடுக்கன்பாளையத்தில் பொது கழிப்பறை வசதி அமைத்து கொடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதையை கழிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே கொடுக்கன்பாளையத்தில் பொதுமக்கள் நலன் கருதி பொது கழிப்பறை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்