சங்கராபுரம் திருக்கோவிலூர் செல்லும் சாலையோரத்தில் போக்குவரத்து இடையூறாக சிமெண்டு குழாய் வைக்கப்பட்டிருந்தது. இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உருவானது. இது குறித்த செய்தி படத்துடன் புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரத்தில் இருந்த சிமெண்டு குழாய்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். இதனால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள், தினத்தந்திக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.