கோவில்பட்டி- தூத்துக்குடி மெயின் ரோட்டில் தெற்கு திட்டங்குளம் வரையிலும் நான்கு வழிச்சாலை உள்ளது. அதுவரையிலும் சாலையின் இருபுறமும் மின்விளக்குகள் உள்ளன. தெற்கு திட்டங்குளத்தில் நான்கு வழிச்சாலை முடிவடையும் இடத்தில் மின்விளக்குகள் இல்லை. இதனால் இரவில் தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டிக்கு செல்லும் வாகனங்கள் தெற்கு திட்டங்குளத்தில் நான்கு வழிச்சாலை தொடங்கும் இடத்தில் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே அங்கு விபத்துகளை தவிர்க்க மின்விளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.