அரியலூர் நகரில் போக்குவரத்தை குறைப்பதற்காக 15 ஆண்டுகளுக்கு முன்பு 7 கிலோ மீட்டர் நீளத்திற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டன. அதில் ஊர்களுக்கு செல்லும் பெயர்கள் தாங்கிய பிரம்மாண்ட பெயர் பலகை பல இடங்களில் நடப்பட்டன. அதில் உள்ள ஊரின் பெயர்கள் தற்போது கிழிந்தநிலையில் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவ கல்லூரி திறக்கப்பட்டது அரசு மருத்துவக் கல்லூரி செல்லும் வழி என்று எந்த பெயர் பலகைகளில்மாற்றம் செய்யப்படவில்லை. கல்லக்குறிச்சி சாலையில் உள்ள பலகை கம்பத்துடன் சாலை விரிவாக்கம்செய்யப்பட்டபோது சாலை ஓரம் போடப்பட்டது. இன்று வரை அந்தப் பலகை தூக்கி நிறுத்தபடவில்லை தற்பொழுது வெளியூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் செந்துறை, ஜெயங்கொண்டம், கல்லங்குறிச்சி, அரியலூர் நகர் பகுதிக்கு செல்ல சரியான வழிகாட்டிப் பலகைகள் இல்லாததால் சிரமப்படுகின்றனர். விழும் நிலையில் உள்ள கம்பங்களை சரி செய்து சாலை ஓரத்தில் கிடப்பதையும் புதுப்பிக்க வேண்டும் என்பது வாகன ஓட்டுகளின் கோரிக்கையாகும்.