புகழிமலை முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது கோடை வெயில் கடுமையாக வாட்டி வதைக்கிறது. இதன் காரணமாக படிகளில் 9 மணிக்கு மேல் நடந்து செல்ல முடியாமல், முதியவர்கள், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் 10 மணிக்கு மேல் நடந்து செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. எனவே தமிழக முதல்-அமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுத்து புகழிமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல மலைப்பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.