தற்காலிக கழிவறை

Update: 2024-04-28 17:52 GMT

மேட்டூர் நகராட்சி பஸ் நிலையத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதனால் அருகில் தற்காலிகமாக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தற்காலிக பஸ் நிறுத்தம் பகுதியில் கழிவறை வசதி இல்லை. இதனால் ஆங்காங்கே இயற்கை உபாதைகளை கழிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இங்கு வரும் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே, தற்காலிகமாக கழிவறை அமைத்து, பஸ் நிலையத்தை சுகாதாரமாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-குமார், மேட்டூர்.

மேலும் செய்திகள்