சிவகங்கை மாவட்டம் திருக்கோடியூர் பகுதியில் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் பள்ளம், மேடு இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?