'லிப்ட்' சுத்தம் செய்யப்படுமா?

Update: 2024-04-28 13:10 GMT

சென்னை மயிலாப்பூர் அருகே முண்டக்கண்ணி அம்மன் ரெயில் நிலையம் உள்ளது. இங்கு அமைந்துள்ள 'லிப்டில்' பொதுமக்கள் சிலர் எச்சில் துப்பி அசுத்தம் செய்கின்றனர். இதனால் `லிப்ட்' முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே பொதுமக்களின் நலம் கருதி, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்