ஒளிராத விளக்குகள்

Update: 2024-04-28 11:44 GMT

களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவில் வடக்கு வாசலுக்கு எதிரே உள்ள தெருவிளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. மேலும் அங்குள்ள வடக்கு ரத வீதியிலும் தெருவிளக்குள் எரியாததால் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். எனவே பழுதடைந்த தெருவிளக்குகளை சரி செய்து, மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்