சுகாதார நிலையம் தேவை

Update: 2024-04-21 17:58 GMT

குமாரபாளையம் கத்தேரி பிரிவு சாலையில் தட்டான்குட்டை, சத்யா நகர், வேமன்காட்டுவலசு, வட்டமலை, எதிர்மேடு, வளையக்காரனூர், கள்ளிபாளையம், குளத்துக்காடு, கோட்டைமேடு உள்ளிட்ட பகுதி உள்ளன. இந்த பகுதிகளில் விளையாட்டு மைதானமோ, அரசு ஆரம்ப சுகாதார நிலையமோ இல்லை. எனவே இப்பகுதி மக்கள் உடற்பயிற்சி மற்றும் மருத்துவ தேவைகளுக்கு அருகில் உள்ள நகரங்களுக்கு சென்று வர வேண்டியதாக உள்ளது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த மக்களின் நீண்டநாள் கோரிக்கையான விளையாட்டு மைதானம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பரணி, நாமக்கல்.

மேலும் செய்திகள்