கள்ளக்குறிச்சியில் இருந்து கூத்தக்குடி செல்லும் சாலையில் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் அறுவடை செய்த எள் செடிகளை சாலையில் கொட்டி உலர வைத்து வருகின்றனர். பின்னர் அந்த எள் செடி கழிவுகளை சாலையோரம் குவியல், குவியலாக போட்டு தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் சாலையோரம் உள்ள மரங்கள் தீப்பிடித்து கருகும் நிலை உள்ளது. இதை தவிர்க்க சாலையில் பயிர்களை உலர வைப்பதை தடுப்பதோடு, விவசாயிகளுக்காக கூத்தக்குடியில் அதிக அளவில் உலர் களங்கள் அமைத்து கொடுக்க வேண்டும்.