கூடுதல் மருத்துவர்கள் தேவை

Update: 2024-04-14 16:59 GMT
சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் போதுமான அளவுக்கு நியமனம் செய்யப்படவில்லை. இதனால் நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பாம்புக்கடி சிகிச்சைக்கான மருந்தும் இல்லை. இதன் காரணமாக ஏழை எளிய மக்கள் வேறு வழியின்றி தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க அரசு மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்