கரூர் மாவட்டம், நொய்யல் அருகே முத்தனூரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பெண்களின் நலன் கருதி கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு முத்தனூர் பகுதியில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. தற்போது இந்த சுகாதார வளாகம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் தற்போது அதனை பொதுமக்கள் பயன்படுத்துவது இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.