கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் உழவர் சந்தை அருகே செல்லும் சாலை மண்சாலையாக உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, மண் சாலையை தார் சாலையாக மாற்றினர். இதற்கு பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.