சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பு

Update: 2024-04-07 17:29 GMT
சின்னசேலம் அருகே பூசப்பாடி கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு செல்லும் சாலையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் யாரேனும் இறந்தால் அவர்களின் உடல்களை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. மேலும் மின்விளக்கு வசதியும் இல்லை. எனவே சாலை ஆக்கிரமிப்பை அகற்றுவதோடு, அங்கு மின்விளக்கு வசதியும் ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்