தவளக்குப்பம் பகுதியில் புதுச்சேரி - கடலூர் சாலையோரம் இலவம் பஞ்சு மரத்தில் தற்போது காய்கள் காய்த்துள்ளன. அவை வெயிலில் வெடித்து பஞ்சுகள் காற்றில் பறப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகள், கடைகளிலும் பஞ்சுகள் விழுந்து கிடக்கிறது. இதை தடுக்க மரத்தில் உள்ள காய்களை பறிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.