கரூர் மாவட்டம் நொய்யல் அருகே சேமங்கி வழியாக புகழூர் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் படிக்கட்டுகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. சேமங்கி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த படிகட்டுகள் வழியாக வாய்க்காலில் இறங்கி குளித்தும், துணி துவைத்தும் வந்தனர். தற்போது இந்த வாய்க்கால் சிதிலமடைந்து உள்ளதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.