சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா தலைமை மருத்துவமனையில் தினந்தோறும் ஏராளமானோர் உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் இல்லை. இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கூடுதலாக செவிலியர் மற்றும் ஊழியர்களை நியமிக்க வேண்டும்.