திருவள்ளூர் மாவட்டம், கன்னியம்பாளைத்தில் புதிய ரேசன் கடை கட்டப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக இந்த ரேசன் கடை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் ரேசன் பொருட்கள் வாங்குவதற்கு பல கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. எனவே, அந்த பகுதி மக்கள் மிகுந்த அவதி அடைகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி ரேசன் கடையை விரைவில் திறக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடிவடிக்கை எடுக்க வேண்டும்.