கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் இங்குள்ள பஸ்நிலைய கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. சாலையும் சேதமடைந்து, மின்விளக்குகள் சரிவர எரியாமலும் காணப்படுவதால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பஸ்நிலைய கட்டிடத்தையும், சாலை, மின்விளக்குகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.