தாரமங்கலம்-ஓமலூர் செல்லும் மெயின் ரோட்டில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு அருகில் குறுக்கு ரோடு செல்கிறது. இந்த பகுதியில் மின் விளக்குகள் பழுதடைந்தும், வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படாமலும் இருக்கிறது. இதனால் அடிக்கடி திருட்டு மற்றும் விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே அடிப்படை வசதிகளை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.