வளவனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டில் உள்ள வள்ளலார் நகரில் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு புதிதாக ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் அந்த கட்டிடத்தை இதுவரை திறக்கவில்லை. இதனால் அந்த கட்டிடம் தற்போது சேதமடைந்து வருகிறது. எனவே மக்கள் வரிப்பணம் வீணாகாமல் தடுக்கும் வகையில் பூட்டிக்கிடக்கும் ரேஷன் கடையை உடனே திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டியது அவசியம்.