குளம் ஆக்கிரமிப்பு

Update: 2024-03-10 16:47 GMT
காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி 18-வது வார்டுக்கு உட்பட்ட சாவடி தெருவில் உள்ள குளம் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் தூர்ந்துபோய் காணப்படுகிறது. மேலும் வடிகால் வாய்க்கால் மற்றும் குளத்தை சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மழைக்காலங்களில் குளத்தில் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்க முடியவில்லை. இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்