சேதமடைந்த மின்கம்பம்

Update: 2024-03-03 16:08 GMT

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சத்யா நகருக்கு செல்லும் வழியில் சாலைக்கு கிழக்கே அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும் இந்த மின்கம்பம் கழிவுநீர் சாக்கடைக்குள் இருப்பதால் கம்பிகள் துருப்பிடித்து எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவிதத்தை தடுக்க மின் கம்பத்தை வேறு இடத்தில் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்