கால்வாயில் உடைப்பு

Update: 2024-03-03 07:51 GMT

அத்திக்கடையில் இருந்து சுண்டபற்றிவிளைக்கு செல்லும் சாலையின் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள சம்பக்குளம் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கால்வாயில் செல்லும் தண்ணீர் உடைப்பின் வழியாக அருகில் உள்ள தென்னந்தோப்பிற்குள் பாய்ந்து வீணாகிறது. இதன்காரணமாக புதூர், செம்பன்கரை, மேலகிருஷ்ணன்புதூர் ஆகிய இடங்களுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சூர்யா, புதூர்.

மேலும் செய்திகள்