அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், மஞ்சமேடு பஞ்சாயத்திற்கு உட்பட்ட முடிகொண்டான் கிராமத்தில் குரங்குகளின் தொல்லை அதிகாமாக காணப்படுகிறது. முடிகொண்டான் கிராமத்தில் கீழஏரியில் உள்ள ஆலமரத்தில் இரவு நேரத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குரங்குகள் தங்கிக்கொண்டு, பகல் நேரத்தில் ஊர் முழுக்க சுற்றித்திரிகின்றன. வீடுகளில் புகுந்து சமையல் பொருட்களை எடுத்துச்செல்வது, தென்னை மரங்கள், கொய்யா மரங்கள், வாழை மரங்களை சேதப்படுத்தி வருகிறது. குரங்குகளை விரட்டினாலும் திரும்பி கடிக்க வருகின்றன. இதனால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.