பெரம்பலூர் மாவட்டம் வசிஷ்டபுரம் ஊராட்சி காவனூரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ளவர்கள் யாரேனும் உயிரிழந்தால் அவர்களின் உடல்களை தானம் செய்ய இப்பகுதியில் மயான கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த மயான கொட்டகை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.