பெரம்பலூர் மாவட்டம், பெருமத்தூரில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அதிக அளவில் மதுபாட்டில்களை வாங்கி சென்று டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பும், இரவு நேரங்களிலும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.