சிக்னல் சரி செய்யப்படுமா?

Update: 2024-02-11 13:43 GMT

திருவள்ளூர் மாவட்டம், பஞ்செட்டி பேருந்து நிலையம் அருகில் சிக்னல் ஒன்று உள்ளது. இந்த சிக்னல் கடந்த 3 மாதங்களாக பழுதடைந்து உள்ளது. பொதுமக்கள் அதிகம் செல்லும் சாலையில் சிக்னல் இயங்காததால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலையும் உருவாகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சிக்னலை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்